நீங்கள் விமர்சனங்களை கண்டு பயப்பிடுபவர்களா?

- Advertisement -

விமர்சனம் என்பது ஒருவரது வாழ்க்கையில் வரக்கூடிய ஒரு பெரிய பிரச்சினை. இன்று வெற்றி பெற்ற அனைவரும் விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தவர்கள் தான் . விமர்சனங்களுக்கு முகங்கொடுக்காத வெற்றியாளர்கள் இல்லை .

தோல்வியாளர்கள் எப்போதும் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க பயப்படுவார்கள், யாராவது எனக்கு எதுக்கு இந்த வேலை, உன்னால் முடியாது , நீ செய்யும் வேலை நடக்காது, உன்னால் முடியாது இவ்வாறான வார்த்தைகளை கேட்டு பயந்து விடுவார்கள்.

தயவு செய்து விமர்சனங்களை கண்டு பயப்படாதீர்கள். விமர்சனம் கூட ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு வெற்றி பெற செய்யும்.

ஒரே இரவில் வெற்றி வந்து விடாது. யார் என்ன சொன்னாலும் கவலை படாதீர்கள்.நீங்கள் உங்கள் மனசாட்சி சொல்வதை மட்டும் கேளுங்கள் . உங்களை கேலி செய்பவர்கள் செய்யட்டும் நீங்கள் உங்கள் கனவை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள்.

உங்களால் முடியாது என யாராவது சொன்னால் நீங்கள் நம்ப வேண்டியது அவர்களை அல்ல உங்களை நம்புங்கள். என்னால் முடியும் என நீங்கள் நம்புங்கள்.

இந்த உலகில் தோற்றவன் சொன்னால் எதையும் கேட்கமாட்டார்கள் ஆனால் வெற்றியடைந்தவன் சொன்னால் கேட்பார்கள். நீங்கள் எது சொல்வதாக இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டு சொல்லுங்கள் . அதுவரை பொறுமையாக உங்கள் கனவை நோக்கி ஓடுங்கள்.

உங்களால் முடியாது என சொல்பவர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். உங்களை போன்ற மனம் கொண்ட நண்பர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு 5 புத்திசாலி நண்பர்கள் இருந்தால் 6 வது புத்திசாலியாக நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கு 5 முட்டாள் நண்பர்கள் இருந்தால் 6 வது முட்டாளாக நீங்கள் இருப்பீர்கள் .

எனவே தயவு செய்து அடுத்தவர்கள் சொல்வதை கேட்காதீர்கள். உங்களை கனவிற்கு உதவி செய்யும் நண்பர்களை கூட வைத்திருங்கள். உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles