2020 தொடர்பில் மீள் பார்வை!

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் 2020 சற்று வேறுபட்ட ஆண்டாகவே இருக்கிறது. 2020இல் மகிழ்ச்சியான சம்பவங்களை காட்டிலும் துயர சம்பவங்களே அதிகம். 2020இல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவங்களை பார்க்கலாம்.

​கொரோனா வைரஸ்

2020ஆம் ஆண்டுக்கு கொரோனா வைரஸ்தான் பிள்ளையார் சுழி போட்டது. சொல்லப்போனால் 2019ஆம் ஆண்டி டிசம்பர் மாதத்திலேயே கொரோனா பரவத் தொடங்கிவிட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டில்தான் உலகம் முழுக்க கொரோனா பரவியது. மக்களை பாதித்து, உயிர்களை கொன்று, கோடிக்கணக்கானவர்களை வீட்டிலேயே அடைத்துவைத்து, ஊரடங்கால் பண நெருக்கடி, வேலையிழப்பு, தொழிலில் நஷ்டம், பொருளாதார சரிவு என கொரோனா கை வைக்காத இடமே இல்லை. இந்த ஆண்டின் மிகப்பெரிய பிரச்சினை கொரோனா வைரஸ் என்றே கூறலாம்.

பெய்ரூட் வெடிப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் சுமார் 190 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், ஏராளமாக பொருட்சேதம் ஏற்பட்டது.

​ஆஸ்திரேலிய புதர்காடுகளில் தீ

ஆஸ்திரேலியாவில் உள்ள புதர்காடுகளில் 2019ஆம் ஆண்டி முடிவில் காட்டுத்தீ பரவத் தொடங்கியது. எனினும், 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை காட்டுத்தீ தொடர்ந்து நீடித்தது. இதனால் மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல கோடிக்கணக்கான விலங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. இதுபோக, ஏராளமான வீடுகள் சேதமடைந்து, பல லட்சம் ஹெக்டேல் நிலம் எரிந்து சாம்பலானது.

​கோபி பிரயண்ட் மரணம்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பேஸ்கட்பால் விளையாட்டு வீரரான கோபி பிரயண்ட் கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது 13 வயது மகளும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவல் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

​ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்

அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் கடந்த மே மாதம் போலீஸ் காவலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டும், இனவெறியை எதிர்த்தும் பல லட்சக்கணக்கானோர் அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், இனவாத பாகுபாடுகள் பற்றி உலகளவில் விவாதங்கள் எழுந்தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles