சொட்டை விழறதுக்கு வேற எதுவுமே காரணமில்ல… இது மட்டும்தான்! தெரிஞ்சிகிட்ட இனி ஆயுசுக்கும் முடி உதிராவே உதிராது?

- Advertisement -

தினமும் செய்யும் இந்த ஒரு விஷயம்தான், உங்கள் வழுக்கைக்குக் காரணம் என்றால், நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள்.

உலகில் அதிகம் கிண்டலுக்கு ஆளாபவர்கள், தலையில் முடி கொட்டிய நபர்கள்தான்.

தலைமுடி இழப்பை, வாழ்வையே இழந்ததுபோல எண்ணிக்கொண்டு மனம்வருந்தி, கூனிக்குறுகி நடப்பவர்கள் ஏராளம். சிலரோ, தலையில் முடி இல்லாமல் இருப்பதை மறைத்து, விக் வைத்துக்கொண்டு, பலரின் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.

வழுக்கைக்கு முதல் காரணம் முடிஉதிர்தல்

ஆரோக்கியமான மனிதர்களுக்கு தினமும் முடி உதிர்தல் இயல்பான ஒன்றுதான், உதிர்ந்த அளவு, மீண்டும் வளரும் இயல்பு மிக்கது, தலைமுடி.

ஆயினும் கொத்து கொத்தாக முடி உதிர்வது, தலையில் சில இடங்களில் முடி வளராமை போன்றவை, தலை வழுக்கையை நோக்கிச் செல்கிறது என்பதை உணர்த்துகின்றன.

தக்க நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், தலை வழுக்கையாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதிகம் உதிர என்ன காரணம்?

சில தனிப்பட்ட ஹார்மோன் குறைபாடுகளைத் தவிர, தலைமுடி உதிர்வதற்கு, நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களே, பெரிதும் காரணமாகின்றன என்பதை நாமறிவோமா? நம்முடைய வழக்கமான தினசரி செயல்களே, தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமென்று நாம் அறிந்துகொண்டால், நிச்சயம் அதிர்ந்துதான் போவோம்.

குளித்தவுடன் தலைசீவுவது

டெய்லி வாழ்க்கையில், பலர் அதிகம் செய்யும் ஒரு அவசர காரியம், குளித்தவுடன் தலைசீவுவது. ஈரத்தலையில் மயிர்க்கால்கள் மிருதுவாக இருக்கும்போது தலையை அழுத்தி சீவுவதன் மூலம், மயிர்க்கால்களில் இருந்து முடிகள் இழுக்கப்பட்டு, முடி அதிகமாக உதிர்கிறது.

அதிக மனஅழுத்தம்

இன்றுள்ள பல வியாதிகளுக்கு அடிப்படையென்று, சித்த மருத்துவர்களும், மேலை மருத்துவர்களும் கை காட்டுவது, மன அழுத்தத்தைத் தான். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், அதனால் அடையும் இன்னல்கள் பலப்பல. அதிலொன்றுதான், முடி உதிர்வது. ஆம்! அதிக மன உளைச்சலால், திசு வளர்ச்சிக்கு துணையாகும் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது.

தலையில் கொண்டை போடுவது

இப்போது இது ட்ரெண்டாகி வருவதை பெரும் நகரங்களில் காண்கிறோம். அதிக முடியை வளர்த்தி இறுக்கமாக பின் உச்சியில் கொண்டை போடுவது. இது கண்டிப்பாக முன் சொட்டை உண்டாக காரணமாகிவிடும். முடிகளை இழுத்து கட்டப்படும்போது வேரோடு முடி வளம் பாதிக்கப்படுவதால் முன் சொட்டை உண்டாக காரணமாகிவிடும்

சோப்

நிறைய ஆண்கள் தலைக்கு சோப் போட்டு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சருமத்திற்கும் தலையிலுள்ள சருமத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இவை கூந்தல் செல்களை பாதித்து முடி உதிர்தலை ஏற்படுத்திவிடும்.

முடி அலங்கார ஜெல்

கூந்தலை ஸ்பைக் போன்ற அலங்காரங்கள் செய்வதற்காக சிலர் ஜெல் மற்றும் க்ரீம் பயன்படுத்துவார்கள். அவற்றிலுள்ள அதிகபப்டியான ரசாயனங்கள் உங்கள் முடியின் வேர்க்கால்களுக்கு நச்சு விளைவிக்கும். இதனால் இளம் வயதிலேயே சொட்டை விழுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles