உடல் எடையை ஒரே மாசத்துல குறைக்கனுமா? இயற்கையாகவே அதுக்கு வழி இருக்கே!

- Advertisement -

உடல் எடையை சரிசமமாக வைத்து உடல் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவோம்.

குண்டாக தொப்பையுடன் இருக்கும் பலருக்கும் டயட்டை பின்பற்றி ஒல்லியாக மாறி விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

ஒரு சிலர் இதனை நினைப்பதோடு சரி, இன்னும் சிலர் இதனை ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பின்பற்றுவார்கள்.

இது எதுவும் வேண்டாம். கடுமையான டயட் வேண்டாம், நமக்கு பிடித்த உணவை தவிர்க்க வேண்டாம், அதே சமயம் இரண்டே வாரத்தில் நீங்கள் விரும்பும் உடல் அமைப்பை பெற ஒரு இயற்கை வழி உள்ளது.

இந்த இயற்கை எடை குறைப்பை செய்வதற்கு நமக்கு ஏழு கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி இலைகள் தேவைப்படும். இதனை பெறுவது அவ்வளவு கஷ்டம் ஒன்றும் கிடையாது. பெரும்பாலான வீடுகளில் இந்த செடி இருக்கும். பொதுவாக இந்த இலையை சளி தொந்தரவு நீங்க பயன்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதனை உடல் எடை குறைக்க எப்படி பயன்படுத்துவது என இப்போது பார்ப்போம்.

இதனோடு சேர்த்து நமக்கு புதினா இலைகள், ஒரு இன்ச் அளவு இஞ்சி மற்றும் தயிர் தேவைப்படும். இப்போது இந்த உடல் எடை குறைப்பு பானத்தை எவ்வாறு தயாரிப்பது என பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஏழு கற்பூரவல்லி இலைகளை சுத்தம் செய்து நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

இதனோடு ஏழு முதல் எட்டு புதினா இலைகள், ஐந்து தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தோல் சீவிய ஒரு இன்ச் அளவு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நுரை பொங்க அரைத்து கொள்ளவும்.

இதனை ஒரு டம்ளருக்கு மாற்றி அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளவும். கடைசியில் 1/2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும்.

நாம் தயாரித்து இருக்கக்கூடிய இந்த பானம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால் இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles