பிரான்சில் பெப்ரவரி நடுப்பகுதி வரை உணவகங்கள் திறப்பில்லை : அரசாங்கம் அறிவிப்பு !

- Advertisement -

உணவகங்கள், அருந்தகங்கள், அருங்காட்சியகங்கள், நாடக அரங்குகள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் யாவும் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதி வரை மூடியிருக்கும் என சற்று முன்னர் அரசாங்கம் அறிவித்துள்ளது.பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸ் என பல ஐரோப்பிய நாடுகள் புதிதாக இறுக்கமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதோடு, மூன்றாவது பொதுமுடக்கத்தையும் அறிவித்திருந்த நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாடு குறித்;து இன்று தெரிவித்துள்ளது.பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ் அவர்கள் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் வழமைபோல் நடைமுறையில் இருக்கும் என்பதோடு, மேலதிகமாமக 10 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் இரவு 6 மணி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது.இதேவேளை தடுப்பூசி வழங்கும் விடயத்தில் பிரான்சின மந்தகதி குறித்து விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், பெப்ரவரி மாத இறுதிக்குள் 1 மில்லியன் தடுப்பூசி செலுத்தப்படும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 600 மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்கப்பட இருக்கின்றது.இதேவேளை உருமாறிய ‘பிரித்தானிய’ வைரஸ் பிரான்சில 10 இற்கும் மேற்பட்டவர்களில் கண்டறியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles