காஷ்மீரில் முழங்கால் அளவு உறைபனியில் 4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்..!!! குவியும் பாராட்டுக்கள்.

- Advertisement -

நம்மளுடைய ரியல் ஹீரோஸ் நம்ம நாட்டைக் காத்துக் கொண்டு இருக்கிற ராணுவ வீரர்கள் தாங்க இன்னைக்கு அவங்க உயிரைப் பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை பத்தி கவலைப்படாம நமது நாட்டைப் பற்றியும் நம்மளோட பாதுகாப்பு பத்தியும் யோசிச்சிக்கிட்டு உரை பனியிலும் நமக்காக பாடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது இதனால் வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அங்கு சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் கடந்த 6ஆம் தேதி குப்வாரா மாவட்டம் ஹண்ட் வாரா பகுதி பெடாவதார் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலி ஏற்பட்டு தவித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து உள்ளது பணிகள் மூடிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத இந்நிலையில் அந்த கர்ப்பிணியின் உறவினர்கள் தவித்துப் போய் இருந்தனர்.

இந்த செய்தி இந்திய ராணுவத்தின் சினார் படைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு நூறு ராணுவ வீரர்களை விரைந்து சென்று பிரசவ வலியால் துடித்த சமா என்ற பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து முழங்கால் அளவு பணியில் சுமந்து சென்றனர். சுமார் நாலு மணி நேரம் உரை பணியில் கால் புதைந்து நடந்த ராணுவ வீரர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியை சேர்த்துள்ளனர்.

தற்பொழுது அந்தப் பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்களாம். இதுகுறித்து அந்த கர்ப்பிணியின் தந்தை குலாம் என்பவர் கூறும் போது பிரசவ வலியால் துடித்த எனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் செய்வதறியாமல் தவித்து விட்டேன். அதன்பின் செல்போன் மூலம் சினார் தடை பிரிவுக்கு தகவல் தெரிவித்தேன் அவர்கள் விரைந்து வந்து எனது மகளை கட்டிலில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். விரைந்து வந்து உதவி செய்ததால் எனது மகளையும் குழந்தையும் காப்பாற்ற முடிந்தது அவர்களுக்கு எனது மனதார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் நமது ராணுவ வீரர்கள் வீரம், தீரம், தொழில் நேர்த்திக்கு பெற்றவர்கள் அதே நேரம் அவர்கள் மனிதாபிமானம் பெரியது எப்போதெல்லாம் மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அப்போது நமது ராணுவ வீரர்கள் ஓடோடி வந்து உதவி செய்கிறார்கள் நமது ராணுவ வீரர்கள் மனிதாபிமானத்தை கண்டு பெருமிதம் கொள்கிறேன். ஷமிமா மற்றும் அந்த குழந்தைக்கு பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்

உறைபனியில் நாலு மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் மக்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles