புதிய பயனர்கள் அதிகரிப்பு; ஒரே நாளில் இத்தனை டவுன்லோஸ் ஆ?

- Advertisement -

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கைகளை “பயனர்களுக்கு எதிரான வண்ணம்” அப்டேட் செய்ததாலும், அதற்கு சரியான மாற்றாக சிக்னல் அப் இருக்கும் என்று ஆங்காங்கே கிளம்பிய கருத்துக்களாலும் – சிக்னல் ஆப்பை இன்ஸ்டால் செய்த புதிய பயனர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடக்கும் பாதையில் உள்ளது.

இந்த அளவிலான எண்ணிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால், வாட்ஸ்அப் கடந்து வந்த அதே பாதையை சிக்னல் ஆப்பும் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உலகளவில் சுமார் 8,10,000 பயனர்கள் சிக்னலை இன்ஸ்டால் செய்துள்ளனர். கடந்த ஜனவரி 6 ஆம் தேதி (அதாவது வாட்ஸ்அப் அதன் தனியுரிமை விதிகளை அப்டேட் செய்த நாள்) நிகழ்ந்த டவுன்லோட் எண்களுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 18 மடங்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி நிறுவனமான ஆப்டோபியாவின் தரவுகள் தெரிவிக்கிறது.

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை விதிமுறைகள் லோக்கேஷன் (இருப்பிடம்) மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட பயனர் தரவை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் போன்றவைகளுடன் பகிர்ந்து கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளன.

இதன் விளைவாக பயனர் தரவு மீதான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கேள்விக்குள்ளாகி, பல பயனர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற மாற்று தளங்களுக்கு இடம்பெயர தொடங்கியுள்ளனர்.

புதிய பயனர்களின் எண்ணிக்கையை சமாளிக்க மற்றும் கையாள கூடுதல் சேவையகங்களை சேர்த்துள்ளதாக சிக்னல் நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இலாப நோக்கற்ற மெசேஜிங் ஆப் ஆன சிக்னல், பெரும்பாலான பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் மிகவும் பாதுகாப்பான மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தகவல்தொடர்பாக மேற்கோளிடப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள வாட்ஸ்அப், கடந்த புதன்கிழமைடன் ஒப்பிடும்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை தினசரி நிறுவல்களில் 7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாகவும் Apptopia-வின் தரவுகள் தெரிவிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles