ஒருநாள் முதல்வராக பதவியேற்ற முதல் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்.

- Advertisement -

ஹரித்துவார் மாவட்டத்தில் வசித்து வரும் 19 வயதான மாணவி தான் ஷிருஷ்டி கோஸ்வாமி. இவர் ரூர்கியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி வேளாண்மை பயின்று வருகிறார். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதல் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய தந்தை மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தியாவிலேயே முதல் முதலாக ஒருநாள் முதலமைச்சராக ஒரு பெண் பதவி ஏற்றுள்ளார் என்றால் அது ஷிருஷ்டி கோஸ்வாமி தான்.

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு இந்த முயற்சி எடுத்துள்ளது.

இன்று ஒரு நாள் முதலமைச்சராக பொறுப்பேற்கும் அவர் அரசின் பல்வேறு திட்டங்களை மேற்பார்வையிட உள்ளார் குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் சுற்றுலாத்துறையின் போன் செய்ய திட்டம் போன்றவற்றை பார்வையிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷிருஷ்டி கோஸ்வாமி பதவி ஏற்பதற்கு முன்பு உத்தரகாண்ட் அரசாங்கத்தின் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள் தங்களின் திட்டம் குறித்து ஒவ்வொருவரும் 5 நிமிடம் விளக்கம் கொடுக்க உள்ளனர்

ஒரு நாள் முதல்வர் பற்றி அந்தப் பெண் கூறுகையில் இதனை என்னால் நம்பவே முடியவில்லை என்னால் முடிந்த நல்லதைச் செய்வேன் மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை எனது பணியின் மூலமாக நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஒரு நாள் முதல்வர் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான முதல்வன் திரைப்படம் தான். அந்தப்படத்தில் முதல் அமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்ட நிருபர் ஒருவரை ஒருநாள் முதலமைச்சராக உன்னை பணியில் அமர்த்து கிறேன் என்று அர்ஜுனை ஒருநாள் முதல்வராக நியமிப்பார் ரகுவரன்.

ஒரு பெண்ணை கவுரவித்து ஒரு நாள் முதல்வர் ஆக பணிபுரிய சந்தர்ப்பம் கொடுத்த அரசை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். இணையத்தில் ஒரு நாள் முதல்வரான ஷிருஷ்டி வாழ்த்துக்கள் குவிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles