அஜித்தின் காதல்கோட்டை இயக்குனரின் மகளுக்கு பிரபல இளம் இயக்குனருடன் விரைவில் திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா.

- Advertisement -

காதல் கோட்டை இந்தப் படம் அஜித்தின் சினிமா கேரியரில் மாபெரும் திருப்பத்தையும் வெற்றியும் பெற்ற படம். அஜித் தேவயானி காதல் காட்சிகள் இன்று வரை மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

ஒருவரை ஒருவர் படத்தின் கிளைமாக்ஸ் வரை பார்த்துக் கொள்ளாமலேயே படத்தை சுவாரஸ்யமாக எடுத்துச் சென்று எப்போது அஜித்தும் தேவயானியும் சந்தித்துக் கொள்வார்கள் என்று ரசிகர்களை ஏங்க வைத்துதான் காதல் கோட்டை படத்தின் பெரிய பிளஸ். அஜித்தின் மாபெரும் வெற்றிப்படமான காதல் கோட்டையை இயக்கிய இயக்குனர்தான் அகத்தியன்.

காதல் கோட்டை இயக்கிய இயக்குனர் அகத்தியன் அவர்களுக்கு மூன்று மகள்கள் அதில் முதல் மகள் கனி அவர்களை சமர் மற்றும் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் இயக்குனர் திரு அவர்கள் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது கனி cook with comali விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இரண்டாவது மகள் விஜயலட்சுமி இவர் பண்டிகை என்ற படத்தின் இயக்குனர் ஃபெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜயலக்ஷ்மி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.

மூன்றாவது மகள் நிரஞ்சனி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து இருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. நிரஞ்சனி தற்பொழுது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசமி அவர்களை திருமணம் செய்ய உள்ளார்.

காதல் கோட்டை இயக்குனர் அகத்தியன் மூன்று மகளும் இயக்குனரை கரம் பிடித்துள்ளார்கள்.

தற்பொழுது நிரஞ்சனி தேசிங் பெரியசாமி அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles