மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

- Advertisement -

பழனி முருகன் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

தமிழகத்தில் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இளம்வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தபங்கேற்று தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் உலக அளவில் கவனத்தை ஈர்த்தார். இதனால் தொடர்ந்து அவருக்கு பாராட்டு குவிய தொடங்கியது.

சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது , அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன்.

கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை உயர்த்தும் என்றும் இனி என்னை போல் உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர விரும்புவர் என்றும் கூறினார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார். தைப்பூசத் திருவிழா முடிந்த நிலையில் இன்று பழனி கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த அவர்,மொட்டையடித்து கொண்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles