இடுப்பைச் சுற்றி இருக்கும் கொழுப்பை கரைக்குறது இவ்வளவு ஈஸியா?

- Advertisement -

இடுப்பைச் சுற்றித் தேங்கியிருக்கும் சதை, கொழுப்பைக் குறைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அத்தகைய இடுப்புச் சதையைக் குறைப்பதற்கு நிறைய காய்கறிகளும் பழங்களும் சாப்பிடுவது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதில் பழங்களில் அதிக கலோரிகளைக் கொண்ட வாழைப்பழத்தை எடை குறைப்பதற்கு சேர்க்கலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் சிலர் வாழைப்பழம் பசியைக் கட்டுப்படுத்தும். அதனால் வாழைப்பழம் சாப்பிடலாம் என்று பரிந்துரை செய்கின்றனர். அதனால் வாழைப்பழத்தை எடை குறைக்கும் டயட்டில் சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

​வாழைப்பழம்

ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 105 கலோரி கிடைக்கிறது. அதில் 14 கிராம் அளவுக்கு சர்க்கரையும் 3 கிராம் அளவு நார்ச்சத்தும் 27 கிராம் கார்போஹைட்ரேட்டும் நிறைந்திருக்கிறது. மற்ற பழங்களை ஒப்பிடும் பொழுது, வாழைப்பழத்தில் கலோரிகளும் கார்போ அளவும் கொஞ்சம் அதிகம் தான். அதனால் அதிகபட்சமான 5 இன்ச் கொண்ட வாழைப்பழத்தை ஒன்றை மட்டும் ஒரு நாளைக்கு சாப்பிடலாம். அது நிச்சயம் உங்களுயை உடல் எடையை அதிகரிக்காது. அதனால் நிச்சயம் எடை குறைக்க நினைக்கும் உங்களுடைய டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. எப்படி என்று பார்ப்போம்.

​மிகச்சிறந்த எரிபொருள்

முறையாக, வேகமாக எடையைக் குறைப்பதற்கு வழக்கமாகத் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். இதைத்தான் ஊட்டச்சத்து நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். அப்படி தொடர்ந்து உடற்பயிற்சி செய்கின்ற காலத்தில் உடற்பயிற்சிக்கு முன்னும் உடற்பயிற்சிக்குப் பின்னும் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் வாழைப்பழம் முதன்மையாக இருப்பது நல்லது.

அதிகமாக வேர்த்து உடலில் உள்ள ஆற்றல்களை இழக்கச் செய்யும் பயிற்சிகள் செய்யும்பொழுது, உடலில் ஆற்றலை சேமித்து வைக்க வேண்டியது அவசியம். அதற்கு மிகச்சிறந்த தீர்வாக வாழைப்பழம் இருக்கும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் மிகச்சிறந்த எலக்ட்ரோலைட்டுகளாக இருக்கும். உடலில் ஆற்றலைச் சேமிக்கும். குறிப்பாக, தசைகளை வலுப்படுத்தும் புரோட்டீன்களான பாதாம் பட்டர் அல்லது வேகவைத்த முட்டையுடன் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுவது இன்னும் கூடுதலான பலன்களைப் பெற முடியும்.

​பசியைக் கட்டுப்படுத்தும்

வாழைப்பழத்தில் அதிக அளவிலான ஸ்டார்ச் இருப்பதால் இது ஜீரணசக்தியை மேம்படுத்துகிறது. வாழைப்பழம் உடலுக்கு நல்ல பாக்டீரியாக்களைக் கொடுக்கும். அதனால் வயிற்றுக்கு மிக இதமாக இருக்கும். சிறந்த ஆக்சிடேஷனாகவும் கொழுப்பை எரிக்கும் ஆற்றலை உடலுக்குக் கொடுப்பதாகவும் இருப்பது வாழைப்பழம். அதோடு அடிக்கடி பசியெடுக்காமல், பசியைக் கட்டுப்படுத்தவும் வாழைப்பழம் உதவும்.

​மெட்டபாலிசம் அதிகரிக்க

ஊட்டச்சத்து மற்றும் மெட்டபாலிசம் குறித்த இதழ் நடத்திய ஆய்வு ஒன்றில் ஒரு நாளின் ஆற்றல் தேவையில் 5 சதவீதமாக இருக்கிற கார்போ மற்றும் ஸ்டார்ச் நாம் வழக்கமாக உணவு உண்டபின் 23 சதவீதம் அளவுக்கு கொழுப்பை எரிக்கப் பயன்படுகிறதாம். அதற்கு மிக்சசிறந்த தீர்வாக, பாதி அளவு மட்டுமே பழுத்த பச்சை வாழைப்பழத்தை ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது. வாழைக்காய் சுவை எப்படி இருக்கும் என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை. தயிர், நட்ஸ், சிறிது பட்டை மற்றும் தேனுடன் வாழைக்காய் சேர்த்து ஸ்மூத்தியாக செய்து சாப்பிட்டுப் பாருங்கள். அந்த சுவை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். தினமும் கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள்.

​வயிறு உப்பசத்தை குறைக்க

தொடர்ந்து அடிக்கடி வயிறு உப்பசம் பிரச்சினை இருக்கிறதா உங்களுக்கு? அப்போ முதலில் வாழைப்பழத்தைச் சாப்பிடுங்கள். இதில் அதிக அளவில் ப்ரீ-பயோடிக் நிறைந்திருப்பதால் இது வயிற்றுக்கு நல்ல பாக்டீரியாக்களைக் கொடுக்கிறது. இதில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

குறிப்பாக, பெண்கள் தங்களுடைய வழக்கமான உணவுக்கு முன்பாக ஸ்நாக்ஸ் போல ஒரு நாளைக்கு இரண்டு முறை வாழைப்பழத்தைத் தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட தொப்பையில் 50 சதவீதம் அளவுக்குக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதை நீங்களும் பின்பற்ற முடிவு செய்தீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது உங்களுடைய டயட்டில் வேறு எந்த சர்க்கரை உணவுகளும் அதிக கார்போ உணவுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

​ரசாயனங்கள் குறைந்தது

வாழைப்பழத்தில் உள்ள கெட்டயான தோல் தான் உங்களுக்கு மிக நல்லது. கெடடியான தோல் இருப்பதால் வாழைப்பழம் அதிக அளவிலான ரசாயனத்தை உறிஞ்சிக் கொள்வதில்லை. அதனால் தான் மற்ற காய்கறிகள் மற்றும் பழங்களை விட வாழைப்பழத்தில் ரசாயனங்கள் மிக மிகக் குறைவு. இது ஆற்றலை எரிக்கும் செயல்பாடு உடலில் நடக்கும்போது, ரசாயனங்கள் கலந்த உணவுகள் இந்த செயலின் வேகத்தைக் குறைத்துவிடும். வாழைப்பழம் சாப்பிடுவதால் இந்த பிரச்சினையைத் தவிர்க்க இயலும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles