விமான நிலையத்திற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு!பார்சலில் இருந்தது என்ன தெரியுமா?

- Advertisement -

மதுரை விமான நிலையத்தில் மர்ம பார்சல் ஒன்று தென்பட்டதால் விமானநிலையம் 3 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரை விமான நிலையத்தில் கன்னியாகுமரியில் இருந்து தபால் மூலமாக சென்னைக்கு அனுப்ப பார்சல் ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து மதுரை விமான நிலைய சரக்கு முனையத்தில் பாதுகாப்பு காரணம் கருதி ஸ்கேனிங் செய்து பார்த்தபோது, அதில் வெடிகுண்டு மூலப்பொருள்(டெட்டர் நேட்டர்) இருப்பதுபோல தெரிய வந்துள்ளது.

உடனடியாக சரக்கு முனையப் பகுதியில் இருந்தவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி ராஜேந்திரன், ஊரக காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினருடன் சென்று பார்சலை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து சென்றனர். அத்துடன் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து வந்த நான்கு பார்சல்களும் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பார்சல்களைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் அதனைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஸ்மார்ட் வாட்ச், சார்ஜர், மிக்சர், இட்லிப்பொடி, நேந்திரம்பழ சிப்ஸ் இருந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles