அவளுக்கு அதில் மட்டுமே நாட்டம்: திருமணம் முடிந்த சில மாதங்களில் மனைவியை கொன்ற கணவன்

- Advertisement -

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் கம்மம் மாவட்டம் யெரபாலம் கிராமத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் எர்ரமல்ல நவ்யா என்பவருக்கும் நாகா ஷேஷு ரெட்டி என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் முடிந்த நாள் முதலே, நவ்யா பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நாட்டம் காட்டி வந்துள்ளதுடன், அதிக நேரம் அதில் செலவிட்டுள்ளார்.

பல முறை இந்த விவகாரம் தொடர்பில் ஷேஷு ரெட்டி தமது மனைவியை கண்டித்தும், அவரது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமது மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்கலாம் என முடிவு செய்த ஷேஷு ரெட்டி, அவரை கொலை செய்யவே திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து விருந்துக்கு என மனைவி நவ்யாவை அழைத்து சென்ற ஷேஷு ரெட்டி, கோத்தப்பள்ளி குட்டா என்ற பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார், ஷேஷு ரெட்டியை கைது செய்ததுடன், இந்த கொலை சம்பவத்தின் உண்மையான பின்னணியையும் விசாரித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles