ஆட்டோக்காரரின் மகள் மிஸ் இந்தியா அழகி போட்டியில் சாதனை!

- Advertisement -

ஆட்டோ ஓட்டுநரின் மகள் மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா சார்பில் ஆண்டுதோறும் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யும் மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பர்.

அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மானசா என்ற அழகி மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

23 வயதான மானஸா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர், நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இதே போல இரண்டாவது இடத்தில பிடித்துள்ளவர் மன்யா சிங்.

இவர் வெற்றி பெற்றது குறித்து தனது இன்ஸ்டாவில், சிறு வயதில் இருந்து பட்ட கஷ்டத்திற்கும், உழைப்பிற்கும் தற்போது பலன் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

காரணம் இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். பல இரவுகள் தூக்கமின்றி, உணவின்றி இருந்ததாகவும், புத்தகங்கள், ஆடைகள், வாங்க பணம் இல்லாமல் தவித்ததாகவும் தனது பதிவில் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் சிறு வயதில் படிக்கும் போதே வறுமை காரணமாக மாலை நேரங்களில் பலரது வீடுகளுக்கு சென்று பாத்திரம் கழுவியதாக, கால் செண்டரில் வேலை பார்த்து கல்வி பயின்றதாகவும், விடா முயற்சியால் மிஸ் இந்தியாவில் இரண்டாவது இடம் பிடித்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மன்யா சிங் மிஸ் இந்தியா அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles