29 வயது பெண்ணை காதல் திருமணம் செய்தார் 80 வயது முதியவர்!

- Advertisement -

தென்னாபிரிக்காவில் 56 வயது மகளை சாட்சியாக வைத்து, 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் வசிக்கும் டெர்சல் ராஸ்மஸ் (Terzel Rasmus) 29 வயதான சட்டக்கல்லூரி மாணவி. சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கையொன்றில் வேலை செய்துவருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு, உள்ளூர் செய்தித்தாள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற போது 80 வயதான வில்சன் ராஸ்மஸ் (Wilson Rasmus) எனும் தாத்தாவை சந்தித்துள்ளார்.

மற்றவர்கள் பார்வைக்குத் தாத்தாவாகத் தெரிந்த வில்சன் ராஸ்மஸ், டெர்சல் ராஸ்மஸின் பார்வைக்கு மட்டும் ரோமியோவாகத் தெரிந்துள்ளார். அதன் விளைவு, வில்சன் ராஸ்மஸை கண்மூடித்தனமாகக் காதலிக்கத் தொடங்கினார். தனது பேரப்பிள்ளைகள் வயதுள்ள டெர்சல் ராஸ்மஸ் மீது வில்சனுக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து டெர்சலும் வில்சனும் சில காலம் டேட்டிங் செய்துவிட்டு, திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். காதல் ஜோடி இருவரும் சென்று டெர்சலின் தாயிடம் சென்று தங்கள் காதல் விவகாரத்தை சொல்ல, அதைக் கேட்டதும் அவர் கோபமடைந்துள்ளார். ஏனெனில், டெர்சலின் தாயை விடவும் வில்சன் சுமார் 24 வருடங்கள் மூத்தவராவார். அதன் பிறகு, அவர் காதல் ஜோடி இருவரும் தங்கள் புனிதமான காதலை அவருக்குப் புரிய வைத்து திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளச் செய்தனர்.

ஒரு வருடத்துக்கும் மேல் ஊர் சுற்றி, டேட்டிங் செய்த காதல் ஜோடி, உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

வில்சனின் 56 வயதான மூத்த மகள் தான் இருவரின் திருமணத்துக்கும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளார். தற்போது திருமணமான ஜோடி இருவரும் தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். டெர்சனின் படிப்பு செலவுகளை வில்சன் கவனித்து வருகிறார்.

இது குறித்து டெர்சல் ராஸ்மஸ் , “வில்சனை பார்த்ததும், அவர் என்னை வாழ்நாள் முழுவதும் நன்றாகக் கவனித்துக் கொள்வார் எனத் தோன்றியது. அந்த ஒரு கணத்தில் இவர் தான் என்னுடைய வருங்கால கணவர் என்பதை முடிவு செய்து விட்டேன். நாங்கள் இருவரும் இப்போது மகிழ்ச்சியுடனே இருக்கிறோம். அவர் என்னை மிகவும் நேசிக்கிறார். என் கணவரைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles