பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க முஸ்லிம் தலைவர்களுக்கு ஏன் தடை?

- Advertisement -

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலானது இருதரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதில் தனிப்பட்ட ரீதியில் நபர்களை தேர்ந்தெடுத்து சந்திப்புக்களுக்கான ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ,

வெளிநாட்டு அரச தலைவர்கள் நாட்டுக்கு விஜயம் செய்யும்போது அவர்களின் நிகழ்ச்சி நிரல், சந்திப்புக்கள் தொடர்பில் இருதரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதே போன்று அவர்கள் செல்ல திட்டமிட்டுள்ள இடங்களுக்கு செல்ல முயாத நிலையில் அந்த நிகழ்வு இரத்தாகக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles